திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20,94,599 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக் 29) வெளியிடப்பட்டது. ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் கூறும்போது, “மக்களவைத் தேர்தலின்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 27-03-24-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 10,23,529 ஆண் வாக்காளர்கள், 10,67,219 பெண் வாக்காளர்கள், 125 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 20,90,873 வாக்காளர்கள் இருந்தனர். பின்னர் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் 8,815 ஆண்களும், 10,005 பெண்களும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 18,825 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். மேலும் 7,424 ஆண்களும், 7,673 பெண்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15,099 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 10,24,920 ஆண் வாக்காளர்களும், 10,69,551 பெண் வாக்காளர்களும், 128 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 20,94,599 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 2,80,982 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக போளூரில் 2,42,707 வாக்காளர்களும் உள்ளனர். மேலும், 1,336 வாக்குச்சாவடி மையங்களில் 2,391 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. செங்கம் (தனி) தொகுதியில் 1,39,164 ஆண் வாக்காளர்களும், 1,41,806 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,80,982 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை தொகுதியில் 1,33,880 ஆண் வாக்காளர்களும், 1,42,917 பெண் வாக்காளர்களும், 42 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,76,839 வாக்காளர்கள் உள்ளனர். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 1,25,397 ஆண் வாக்காளர்களும், 1,30,766 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,56,173 வாக்காளர்கள் உள்ளனர். கலசப்பாக்கம் தொகுதியில் 1,23,505 ஆண் வாக்காளர்களும், 1,27,590 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,51,107 வாக்காளர்கள் உள்ளனர். போளூர் தொகுதியில் 1,18,908 ஆண் வாக்காளர்களும், 1,23,789 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,42,707 வாக்காளர்கள் உள்ளனர்.
» புதுச்சேரியில் நவ.4 முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
» “முன்னோடி திட்டங்களில் ஒன்று ரோஜ்கர் மேளா!” - மதுரையில் மத்திய அமைச்சர் புகழாரம்
ஆரணி தொகுதியில் 1,35,624 ஆண் வாக்காளர்களும், 1,43,870 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,79,524 வாக்காளர்கள் உள்ளனர். செய்யாறு தொகுதியில் 1,27,858 ஆண் வாக்காளர்களும், 1,33,787 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,61,652 வாக்காளர்கள் உள்ளனர். வந்தவாசி(தனி) தொகுதியில் 1,20,584 ஆண் வாக்காளர்களும், 1,25,026 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,45,615 வாக்காளரக்ள் உள்ளனர்.
கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்கள், அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://www.elections.tn.gov.in மற்றும் https://tiruvannamalai.nic.in என்ற இணையதளம் மற்றும் Voter Helpline என்ற கைப்பேசி செயலி வழியாகவும் பெயர்களை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்தார். அப்போது கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.