திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 18.89 லட்சம் வாக்காளர்கள் | வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் 2025-ஐ முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி இன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் 2025-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு: "பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும், ஆண்கள் 1,32,395, பெண்கள் 1,39,090, இதரர் 63 என மொத்தம் 2,71,548 வாக்காளர்களும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடிகளும் ஆண்கள் 1,14,754, பெண்கள் 1,23,115, இதரர் 8 என மொத்தம் 2,37,877 வாக்காளர்களும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடிகளும், ஆண்கள் 1,40,543, பெண்கள் 1,51,889, இதரர் 25 என மொத்தம் 2,92,457 வாக்காளர்களும், நிலக்கோட்டை(தனி) சட்டமன்ற தொகுதியில் 271 வாக்குச்சாவடிகளும், ஆண்கள் 1,20,954, பெண்கள் 1,26,321, இதரர் 15 என மொத்தம் 2,47,290 வாக்காளர்களும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளும், ஆண்கள் 1,40,342, பெண்கள் 1,47,064, இதரர் 73 என மொத்தம் 2,87,479 வாக்காளர்களும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், ஆண்கள் 1,36,187, பெண்கள் 1,44,772, இதரர் 43 என மொத்தம் 2,81,002 வாக்காளர்களும், வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும், ஆண்கள் 1,32,437, பெண்கள் 1,38,946, இதரர் 3 என மொத்தம் 2,71,386 வாக்காளர்களும், என மாவட்டத்தில் மொத்தம் 2124 வாக்குச்சாவடிகள் மற்றும் ஆண்கள் 9,17,612, பெண்கள் 9,71,179, இதரர் 230 என மொத்தம் 18,89,039 வாக்காளர்கள் உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலினை தவறாமல் பார்வையிட்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர்கள் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான படிவங்களில் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு (31-12-2006ம் தேதி வரை பிறந்தவர்கள்) படிவம் 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் 8, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரம் சேர்த்தல் படிவம் 6 பி பூர்த்தி செய்து விண்ணப்பிக் வேண்டும். விண்ணப்பங்களை, சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் (சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர்) அலுவலகங்கள், சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (வருவாய் வட்டாட்சியர் / மாநகராட்சி ஆணையர் / நகராட்சி ஆணையர்) அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சமர்ப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர்கள் இணையவழி மூலமாக நேரடி விண்ணப்பம் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் "Voters Help Line" என்ற கைபேசி செயலி மூலம் வினாணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-ல் அழைத்து விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 24ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல் நீக்கம், முகவரி மாற்றம் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

எனவே, பொதுமக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் திருத்தம் செய்ய விரும்புவர்கள் இவ்வாய்ப்பினை முழுமையாகப் பயண்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகையதீன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் முத்துராமன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE