எல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலை சமூகத்தை உருவாக்குவோம்: தவெக மாநாட்டின் கொள்கை விளக்கத்தில் அறிவிப்பு

By KU BUREAU

விழுப்புரம் /சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் 'வெற்றிக் கொள்கை திருவிழா' என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்றது.

கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் விஜய் கொடியேற்ற, கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்துப் பேசியது: மதம், சாதி, நிறம், இளம், மொழி பாலின் அடையாளம், பொருளாதாரம் என்ற தனி அடையாளங்களுக்குள் மனிதர்களை சுருக்காமல், அனைவரது சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி, பல்லோருக்கும் எல்லாம் என்ற சமநிலை சமூகத்தை உருவாக்குவோம். மக்களை இனம், மதம், மொழி, சாதி எனப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை உத்தரவாதப்படுத்துவோம்.

ஆட்சி, அதிகாரம், சட்டம், நீதி, அரச இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவோம். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதியை முழுவதும் ஒழிக்கும் வரை, அனைத்துப்பிரிவினருக்கும். அனைத்துத் துறைகளிலும் விகி தாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவோம். ஆண்களுக்கு நிகராக பெண்கள், 3-ம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவோம்.

அனைத்து மதத்தவர் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை சமமாகப் பாவிக்கும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்போம். மாநில தன்னாட்சி உரிமையே, மக்களின் தலையாய உரிமை. எனவே, மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பதே தவெகளின் தன்னாட்சி கொள்கையாகும். தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை தவெக பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி வழக்காடு மொழி, வழிபாட்டு மொழியாக இருக்கும். தமிழ் வழியில் படித்தாவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு, தனியார் துறைகளில் அரசியல் தலையீடு இல்லாத, வஞ்சம் இல்லாத நிர்வாகம் கொண்டுவரப்படும்.

அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், தூய காற்று, குடிநீர் வழங்கப்படும் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். நீண்டாமையை ஒழிக்கும் வகையில் பிற்போக்குச் சித்தனைகளை நிராகரித்து, பழமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்போம். இயற்கையைப் பாதிக்காத வகையில் மாநில வளர்ச்சி இருக்கும். போதையில்லா தமிழகம், உற்பத்தி திறன் அதிகரிப்பு ஆகியவை கட்சியின் அடிப்படை கொள்கைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, கட்சியின் செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகி கேத்ரின் பாண்டியன் பேசும்போது, "அரசு நிர்வாகம் முற்போக்குச் சிந்தனை, பன்முகத்தன்மையுடன் இருக்கும். எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்படும். தலைமைச் செயலக கிளை மதுரையில் அமைக்கப்படும். சமத்துவம், சமூக நிதிக்கு எதிரான வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்கும் சமமான இடப்பங்கீடு வழங்கப்படும்.

சாதி, மதம், மொழி வழி சிறுபான்மையினருக்கு பாது காப்பான குழல் உருவாக்கப் படும் பட்டியலின், பழங்குடி மக்க வின் முன்னேற்றத்துடன், பிற்படுத் தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படும்" என்றார்.

அரசியல் கட்சியினர் வாழ்த்து: தவெக மாநாட்டுக்கு அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

துணை முதல்வர் உதயநிதி: விஜய் எனது நீண்டகால நண்பர். சிறு வயதிலிருந்தே அவரைத் தெரியும். நான் தயாரித்த முதல் படமே விஜய் நடித்ததுதான். அவரது புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துகள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக எந்த கட்சியும் வரக்கூடாது என்று சட்டமெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க லாம் பல கட்சிகள் வந்திருக் கின்றன, பல காணாமல் போயிருக்கின்றன. கொள்கைகளும், மக்கள் பணியும்தான் முக்கியம்

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: காமராஜரின் நேர்மை, எளிமை,தூய்மையைப்பின்பற்றும் வகையில் கட்சி தொடங்கியுள்ள விஜய் நடத்தும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: 2014 மக்களவைத் தேர்தலின் போது விஜய் ரசிகர்கள் 100-க்கும் மேற்பட்டோர், ரசிகர் மன்றக் கொடி களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது அந்த அன்போடும், நட்போ டும் மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சியிலும், அதிகாரத்திலும்பங்கு என்று தவெசு மாநாட்டில் விஜய் பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. எல்லோருக்கும் எல்லாமும் என்ற அரசியலை முன்னெடுக்க, அனை வருக்கும் சமமான வாய்ப்பு என்பதே எதிர்காலத்தின் அரசியல் கருத்தியலாக இருக்கும். தமிழக அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்.

திரைத் துறையினர்...

நடிகர் விஜய் சேதுபதி: தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, விஜய்க்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.

நடிகர் சிவகார்த்திகேயன்: தனது புதிய பயணத்தைத் தொடங்க விருக்கும் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இதேபோல, நடிகர்கள் சசி குமார் சூரி, ஜெயம்ரவி, பிரசன்னா, சிபி சத்யராஜ், ஆர்ஜே பாலாஜி, அர்ஜுன் தாஸ். இயக்குநர்கள் வெங்கட் பிரபு, நெல்சன் திலீப் குமார், கார்த்திக் சுப்புராஜ், தயா ரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்

பாஜக பாராட்டும், விமர்சனமும்... பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், "திமுகவுக்கு முடிவு கட்டும் வகையில், நடிகர் விஜய் அரசியல் வருகை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத வெளியிட்ட அறிக்கையில், "அதிகார அரசியலுக்காக திமுக வழியில் வாக்கு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் விஜய் செயல்பட முடிவு செய்திருப்பது, மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. சீமானின் மறு உருவமாக, அரசியல் நடிகர் ஜோசப் விஜய் விளங்குவார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது" என்று விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE