வேடசந்தூர்: வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தண்டபாணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில், கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.தண்டபாணி (75). இவர், கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று உயிரிழந்தார். இவர்,காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். 1986-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1996 ம் ஆண்டு மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். 1998 முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பு வகித்தார்.
2006 முதல் 20011 ம் ஆண்டு வரை வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிவந்த இவர், பின்னர் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து பணியாற்றினார். உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றுவந்தநிலையில், ம.தண்டபாணி ஞாயிறு (அக்.27) மாலை உயிரிழந்தார்.
முன்னாள் எம்எல்ஏ எம்.தண்டபாணியின் உடல் அவரது சொந்த ஊரான வேடசந்தூர் அருகே உள்ள மல்லிகாபுரம் கிராமத்தில் இன்று மாலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
» புதுச்சேரி கடலில் குளித்த இரு பொறியியல் மாணவர்கள் அலையில் சிக்கி மாயம்: தேடும் பணி தீவிரம்
» ‘இரு எதிரிகள்’ முதல் ‘கூத்தாடி’ வரை - தவெக மாநாட்டில் விஜய் உரையின் 15 தெறிப்புகள்