முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய நிறுவனத்தில் அமலாக்க துறை 2-வது நாளாக சோதனை

By KU BUREAU

சென்னை: சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ராம் பிராப்பர்ட்டீஸ் அண்ட்இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்க இவர் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

இதன்பேரில், வைத்திலிங்கம், அவரது மகன்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை, தஞ்சாவூரில் வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கம் வீடு, அவரது மகன்கள்மற்றும் உறவினர் வீடுகள், சென்னையில் உள்ள பல இடங்களில் சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமானநிறுவனத்தில் 2-வது நாளாகநேற்றும் சோதனை நீடித்தது.அந்த வகையில், வைத்திலிங்கம்குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது, லாப - நஷ்டம்எவ்வளவு, ராம் நிறுவனம் எதன்அடிப்படையில் வைத்திலிங்கம்நிறுவனத்துக்கு பணம் வழங்கியது என்பது குறித்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரிப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE