சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு: அப்பாவு தகவல்

By KU BUREAU

திருநெல்வேலி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேச அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தடகளப் போட்டிகளைத் தொடங்கி வைத்த அப்பாவு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்குத்தான் 70 சதவீதம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பேரவையில் திமுக உறுப்பினர்கள் 132 பேரும்,அதிமுக உறுப்பினர்கள் 66 பேரும்உள்ளனர். திமுக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, அதிமுகவினர் பேசுவதற்குத்தான் இரு மடங்கு நேரம் வழங்கப்படுகிறது.

ஆனால், கேள்வி நேரம் தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டுவிட்டு, வெளிநடப்பு செய்து விடுகின்றனர். பேரவையில் சபைக்கு அனுமதிஇல்லாத வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பேரவை நிகழ்வுகள் அனைத் தையும் நேரலை செய்வதுபற்றி, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE