சென்னை: உமா பதிப்பக உரிமையாளர் ராம லட்சுமணன் (74) சென்னையில் நேற்று காலமானார். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ராம லட்சுமணன். தமிழ், தமிழ் இலக்கியம், நூல்கள் மீது ஆர்வம் கொண்ட இவர், 1987-ம் ஆண்டு உமா பதிப்பகத்தை சென்னையில் தொடங்கி, 37 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சென்னை, மண்ணடி, பவளக்கார தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல், அவரது இல்லத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் திருவொற்றியூரில் உள்ள நகர விடுதியில் இன்று (அக்.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இவரது பதிப்பகம் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழிலக்கியம் மற்றும் பக்தி நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பக்தி நூல்களை விற்பனை செய்வதற்காகவே, மறைந்தஅவரது மனைவி பெயரில் ‘சகுந்தலை நிலையம்' என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.
இவருக்கு மகள் உமையாள் (45), மகன் ராமநாதன் ஆகியோர் உள்ளனர். இவரது பதிப்பு நூல்கள் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளன. 7 பல்கலைக்கழகங்களில் பாடமாக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
» தீபாவளி பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
» சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.56.5 கோடியில் 4 தளங்கள் கட்ட அரசு அனுமதி