சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க காலை 1 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையாவது காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் பட்டாசு வெடிக்கஒதுக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே தமிழக அரசு, தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலையிலும், மாலையிலும் தலா ஒரு மணி நேரம் அதிகரிக்க வேண்டும்.
அதேபோல பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளி, கல்லூரிகளில் அறிவிப்பு பலகைகளில் எழுதி மாணவர்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படாத வண்ணம் பட்டாசுகளை வெடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.