அதிமுகவோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை: அமைச்சர் ரகுபதி விமர்சனம்

By KU BUREAU

புதுக்கோட்டை: ‘அதிமுகவோடு கூட்டணிசேரஎந்தக் கட்சியும் தயாராக இல்லை’என தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை. திமுக கூட்டணி உடைந்துபோகும் என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறி இருக்கிறார். இதுஅவருடைய பகல் கனவு. திமுக கூட்டணியை உடைக்கவோ, எரிக்கவோ, கொளுத்தவோ, நொறுக்கவோ, நசுக்கவோ யாராலும் முடியாது. இவையெல்லாம் பழனிசாமியின் கூட்டணிக் கட்சிகளுக்குவேண்டுமென்றால் ஏற்படுமேதவிர, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஏற்படாது.

ஒரு கட்சியை வேறொரு கட்சி அழிக்கத் தேவையில்லை. ஒரு கட்சியின் தலைமை பலவீனமாகப் போய்விட்டால் அக்கட்சி தானாகவே அழிந்துவிடும். அதன்படி, பழனிசாமியின் தலைமை பலவீனமாகி உள்ளது. அதிமுகவோடு கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. அதிமுக கூட்டணியில் சேர்க்க அவரும் வலை விரித்துப் பார்க்கிறார். ஆனால், எந்தக்கட்சியும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

தமிழகத்தில் திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் திருமாவளவன் முதல்வராக முடியாது என்றுமத்திய இணை அமைச்சர் முருகன்கூறுவதும், அவர் முதல்வராவார் என்று சீமான் கூறுவதும் என்பது அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பட்டிமன்றப் பேச்சாடல். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE