வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண் மணி, காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி மற்றும் சங்கு வளையல் போன்றவை இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது. இதுவரை, கண்ணாடி மணிகள் கல்மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கி.பி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவ பொம்மை உள்ளிட்ட 1,800க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் போன்றவை இன்று கிடைத்துள்ளன. வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,395 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE