கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அறநிலையத் துறை சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் ஆறு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது . இதில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மணமகன், மணமகள் பெற்றோர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் வைணவக் கோயில்களில் புகழ்பெற்றதாகும். இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று ஆறு ஜோடிக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. 6 ஜோடிக்கும் தாலிக்கு தங்கம் உட்பட தலா ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

கடலூர் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், தேவநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், கடலூர் பாடலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சுரேஷ், கடலூர் இந்து அறநிலைத் துறை ஆய்வாளர் பரமேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் மணமக்களின் பெற்றோர்கள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE