புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்சவரம்பை ரூ.7 ஆயிரமாக நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். மத்திய அரசின் ஊதிய முறையைப் பின்பற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பிமற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும்.
மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி, புதுச்சேரி அரசின்நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் நகல், அனைத்து துறைச் செயலர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.