பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்தில் 68,569 வீடு கட்ட ரூ.209 கோடி நிதி: முதல் தவணை ஒதுக்கீடு

By KU BUREAU

சென்னை: பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இந்த ஆண்டு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித் துள்ளது.

இதுகுறித்து தமிழக ஊரகவளர்ச்சி துறை வெளியிட்ட அர சாணையில் கூறியிருப்பதாவது: பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2029வரை, கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட மத்திய ஊரக வளர்ச்சி துறை கடந்த ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது. அதில், தமிழகத்தில் இந்த 2024-25-ம் நிதி ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் கடந்த செப்டம்பர் 19-ம் தேதிஎழுதிய கடிதத்தில் கூறியிருந்ததா வது: கடந்த 2018-ம் ஆண்டு தரவுகளில் இருந்து பயனாளிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். மத்திய அரசுஒரு வீட்டுக்கு நிர்வாக செலவு தவிர்த்து ரூ.1.20 லட்சம் நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் அடிப்படையில் 68,569 வீடுகள் கட்ட வேண்டும். இதற்கான ரூ.836.81 கோடியில், மத்திய அரசு ரூ.502.09 கோடியை வழங்கும். எஞ்சிய ரூ.334.72 கோடி, மாநில அரசின் பங்காகும். இந்த நிதியில் நிர்வாக செலவையும் சேர்த்து மத்திய அரசு முதல் தவணையாக ரூ.125.52 கோடி ஒதுக்க வேண்டும்.

முன்னதாக, இத்திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட வீடுகள் ரத்து செய்யப்பட்டதால், மத்திய அரசின் பங்கான ரூ.314.13 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.209.52 கோடி என தமிழக அரசின் பொது கணக்கில் ரூ.523.65 கோடி உள்ளது. மேலும், தமிழக அரசின் பங்காக இந்த ஆண்டுக்கு ரூ.83.68 கோடி ஒதுக்கப்பட வேண்டும். அரசின் பொது கணக்கில் உள்ள ரூ.209.52 கோடியில் இருந்து இந்த தொகையை சரிகட்டலாம்.

எனவே, மத்திய அரசின் பங்கானரூ.314.13 கோடியில் இருந்து ரூ.125.52 கோடி மற்றும் மாநில அரசின் பங்கான ரூ.209.52 கோடியில் இருந்து ரூ.83.68 கோடி எனரூ.209.20 கோடி நிதியை விடுவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ரூ.209.20 கோடியை முதல் தவணையாக ஒதுக்கி உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE