சென்னை: சென்னை மாநகராட்சியில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது குறித்து நேற்று பரிசோ தனை செய்யப்பட்டது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத இடங்களில் இருக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க கருடா, கோத்தாரி, டிராகோஎன 3 ட்ரோன்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ட்ரோன்களில் பால், ரொட்டி மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோவரையிலான அத்தியாவசி யப் பொருட்களை கொண்டுசெல்ல முடியும். மேலும், இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ.தூரம் வரை பறக்கும். இந்த ட்ரோன்களின் செயல்பாடுகள் நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் பரிசோதிக்கப்பட்டது.
இதை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார். ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.