வரலாற்றில் உச்சம்... தங்கம் விலை சவரன் ரூ.57,000 கடந்தது!

By KU BUREAU

வரலாற்றில் உச்சமாக இன்று தங்கம் விலை சவரன் ரூ.57,000யைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து வரலாற்றின் உச்சமாக சவரன் ரூ.57,000யைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைத்திருந்தவர்களும், முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ45 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 7,140க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE