மதுரையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் போலீஸார்: காவல் ஆணையர் தகவல்

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில், பயிற்சி பெற்ற போலீஸார் இருப்பதாக காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்தார்.

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் 30 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா ஆம்னி பேருந்து நிலைய உரிமையாளர் நலச் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. மதுரை மாநகர மேயர் இந்திராணி பங்கேற்று கேமரா கண்காணிப்பு அறையை திறந்து வைத்தார். மாநகர காவல் ஆணையர் முனைவர். லோகநாதன், காவல் உதவி ஆணையர் சிவசக்தி ,அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:“இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளே வரும் இடம், பேருந்துகள் வருகைக்காக காத்திருக்கும் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை குற்றச் செயல்களை தடுக்க ஏதுவாக அமையும். அதோடு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களை பிடிக்க உதவியாக இருக்கும். மேலும், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலும் 60 சிசிடிவி உள்ளன. பழுதான சிசிடிவி கேமராக்களும் சீரமைக்கப்பட்டு 24மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறது. ‌லீவு முடிந்து வெளியூர் செல்ல பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில், திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்க, அதிக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளிக்கு ஆடைகள் வாங்க மக்கள் குவியும் மாசி வீதிகளில் உயர் கோபுரங்கள்,சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. விளக்கு தூண் காவல் நிலையம், அருகே கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

மேலும், பருவ மழையை எதிர்கொள்ள மதுரையில் போலீசார் தயாராக உள்ளனர். தாழ்வான பகுதிகள் கண்டறிந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் காரில் சிக்கியவர்களை போலீஸார் நீந்தி‌ச் சென்று காப்பாற்றியுள்ளார். பேரிடர் காலத்தில் பணியாற்ற பயிற்சி எடுத்த போலீஸாரும் தயார் நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE