கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் நேற்றிரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் மழை பெய்து வந்த நிலையில், இன்றும், நாளையும் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், தமிழக முதல்வர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தார்.
அதன் பின்னர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தங்களது மாவட்டங்களில் மழையைக் கருத்தில் கொண்டு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஒருநாள் மட்டும் தங்களது மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.15, 2024
» டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி ரன் குவிப்பார்: பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை