போராட்ட களத்தில் சிஐடியு நிர்வாகிகள் கைது: மாற்று இடத்தில் தொழிலாளர்களுடன் சீமான் சந்திப்பு

By KU BUREAU

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியுநிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பொடவூரில் திரண்ட தொழிலாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

சுங்குவார்சத்தித்தில் இயங்கி வரும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தில் சிஐடியு தொழிற் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் இடதுக்கு வந்த சிஐடியு மாநிலத் தலைவர்சவுந்தரராஜன், செயலர் முத்துக்குமார் மற்றும்30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழியில் நிறுத்தப்பட்டு கைது செய் யப்பட்டனர்.

சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வரும்தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் அந்த இடத்துக்கு வராமல்திடீரென்று இடத்தை மாற்றி பொடவூர் பகுதியில் தொழிலாளர்கள் கூடினர். இவர்களை நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். நாம் தமிழ் நிர்வாகிகள், சாம்சங் தொழிலாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பா.பெஞ்சமின், வி.சோமசுந்தரம், பி.வி.ரமணாஆகியோர் நேரில் சந்தித்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களு டன் பெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பழனி உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE