நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அதிமுக பொது செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

By KU BUREAU

மேட்டூர்: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றுஅதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடிஅருகேயுள்ள போடிநாயக்கன்பட்டி குப்பதாசன் வளவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்-ஆனந்தி தம்பதியின் இளைய மகள் புனிதா (19). நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் இவருக்கு எம்பிபிஎஸ் சீட்கிடைக்கவில்லை. மேலும், பாராமெடிக்கல் கலந்தாய்விலும் இவருக்கு அரசுக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த புனிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.2 லட்சம் நிதியுதவி: இந்நிலையில், மாணவி புனிதாவீட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சென்று, புனிதாவின் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீட் தேர்வு ஒழிக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? திமுகவின் வாக்குறுதியை நம்பிய மாணவர்கள் பலர் தங்கள் உயிரைவிட்டு வருகின்றனர். நீட் தேர்வைக் கொண்டுவந்ததே காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிதான். இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தோம். நாடாளுமன்றத்தில் பேசினால் மட்டும் போதாது, அழுத்தமும் கொடுக்க வேண்டும்.

நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக இதுபோன்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது. பிரதமரை பலமுறை சந்தித்தும்கூட, நீட் தேர்வுரத்து தொடர்பாக முதல்வர் பேசவில்லை. திமுக எம்.பி.க்கள் அழுத்தம் கொடுத்தால், நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE