குரூப்-4 உள்ளிட்ட 7 தேர்வுகளுடன் வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

By KU BUREAU

சென்னை: வரும் 2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உட்பட மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிக்க இது மிகவும் உதவியாக உள்ளது.

இந்த நிலையில், வரும் 2025-ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in)டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதில், குரூப்-1 தேர்வு, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு என மொத்தம் 7 தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

முன்கூட்டியே வெளியானது: ஒவ்வொரு தேர்வுக்கும் எப்போது அறிவிப்புவெளியிடப்படும், எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது போன்ற விவரங்களை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதுகாலி இடங்கள் விவரம் தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வழக்கமாக டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை, இந்த ஆண்டுமுன்கூட்டியே வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE