கோவை: பிராமணர்களை தரக்குறைவாக பேசுவோர் மீது சிறப்பு பிசிஆர் சட்டத்தை இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து பிராமணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசும்போது, "பிராமணர் சமூகத்தை தரக்குறைவாகப் பேசுவோர் மீது மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பிசிஆர் சட்டத்தை இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி நவம்பர் 3ம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் பிராமணர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிராமணர்கள் கூட்டமைப்பு மன்றத்தின் தலைவர் பி.கே.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பிராமணர்கள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சனாதானம் காப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைத்து பிராமணர்கள் கூட்டமைப்பு மன்றத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
» கடலூர் அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து - டிஎஸ்பி படுகாயம்
» மனுவுடன் தரையில் படுத்து கட்டிடத் தொழிலாளி போராட்டம் - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!