கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி 10-வது முதல்வராக லோகநாயகி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியாற்றிய தாமோதரன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுப் பெற்றார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராஜா பொறுப்பு முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் நியமனம் செய்யப்பட்டனர்.
அதில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உடற் கூறியியல் துறை பேராசிரியர் வா.லோகநாயகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.
» 1,100 நாள் வேலை செய்த தற்காலிக கோயில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
» கடலூர் - குறிஞ்சிப்பாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து தம்பதி படுகாயம்
அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி 10வது முதல்வராக கல்லூரி முதல்வர் அறையில் இன்று (அக். 6ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.