கடலூரில் மீனவர்கள் வலையில் சிக்கிய 150 டன் மீன்கள்

By க. ரமேஷ்

கடலூர்: கடலூரில் மீனவர்கள் வலையில் 150 டன் மீன்கள் சிக்கியது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மீனவர்கள் வலையில் அதிர்ஷ்டவசமாக சிக்கிய 150 டன் மீன்கள். கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீன் பிடி தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பொழுது வலையில் அதிர்ஷ்டவசமாக 150 டன் "பெரும் பாறை" வகையைச் சார்ந்த பாறை மீன்கள் பிடிபட்டது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீனவர்கள், மீன்கள் அனைத்தையும் கரைக்கு கொண்டுவர முயன்றனர். இருப்பினும் மீன்களை அதிக அளவில் கரைக்கு கொண்டுவர முடியாமல் 50 டன்கள் மீன்களை கடலிலேயே விட்டு நேற்று (அக்.5 ) இரவு கரை திரும்பினர் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE