சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி வாரிய குடியிருப்புகளில் போதை பொருட்கள் புழக்கம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் கஞ்சா,போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளது.

குடிசை பகுதிகளைக் குறிவைத்து போதைப் பொருள் வியாபாரத்தை நடத்தியநாசக்காரர்கள், தற்போது அடுக்குமாடி வாரிய குடியிருப்புகளை தங்களது வியாபார கேந்திரமாக மாற்றியுள்ளது மிகவும் அபாயகரமானது. இதுபோன்ற செயல்கள் அங்குள்ள குழந்தைகள், இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்து விடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள். ஏராளமானோர் வசிக்கும் இந்த இடங்களை தேர்ந்தெடுத்து சமூகவிரோதிகள் போதைப் பொருட் களை விற்பனை செய்கின்றனர்.

உயர் நீதிமன்றம் எச்சரிக்கை: குறிப்பாக, கடந்த மாதம் ஒருவழக்கில், சென்னை உயர் நீதிமன்றமுதல் அமர்வால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு, ‘போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க போதிய அளவில் காவலர்கள் இல்லை. அதை கட்டுப்படுத்த உயர் நீதிமன்றமே இதுகுறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டி இருக்கும்’ என்று எச்சரித்தது.

தமிழகத்தில் அதிகரித்து வரும்போதைப் பொருட்கள் நடமாட் டத்தை எதிர்க்கட்சிகள், உயர் நீதிமன்றம், நாளிதழ்கள், ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், நடவடிக்கை எடுக்காமல் அரசுவேடிக்கை பார்ப்பது கண்டிக்கத் தக்கது.

இனி, அரசை நம்பி பயன் இல்லை. நேர்மையான காவல் அதிகாரிகள் மனது வைத்து செயல்பட்டால் மட்டுமே, வாரிய குடியிருப்புகளில் உள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகளை அழிவில்இருந்து காப்பாற்ற முடியும். தங்கள் மகன், மகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணித்து, போதை அரக்கர்களின் பிடியில் இருந்து அவர்களை காப்பாற்ற முழு முயற்சி எடுக்க வேண்டும். அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் அரசுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டு வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE