வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தாழ்வான பகுதிகளில் படகுகள் நிறுத்தம்

By KU BUREAU

சென்னை: வட கிழக்குப் பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் படகுகள் நிறுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரம் அடிக்கடி பெருமழை, பெருவெள்ளத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கத்தால் வரலாறு காணாத பெருமழை, பெருவெள்ளம் ஏற்பட்டது. மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. அப்போதுமாநகராட்சி சார்பில் பொதுமக் களை மீட்கவும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவியது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3-வது வாரத்தில்தொடங்க உள்ளது. வட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாகமழை பெய்யும் என சென்னைவானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது.

முதல்வர் அறிவுறுத்தல்: இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், ‘‘மழை, வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது. அந்த நோக்கத்தோடு அரசு இயந்திரம் விரைவாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப தேவையான இயந்திரங்கள் மற்றும் படகுகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் 36 படகுகள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றில்சில படகுகள் வெள்ளத்தால் அதிகம்பாதிக்கப்படக்கூடிய மாதவரம்,பெருங்குடி ஆகிய மண்டலங்களில்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற மண்டலங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னையில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள, மாநகராட்சியின் 15 மண்டலங் களிலும் தலா 1 ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடனான ஆலோசனை கூட்டத்தைமாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் நடத்தி, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மாநகராட்சியுடன் இணைந்து மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் சென்னை மாநகராட்சியின் https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தன்னார்வலர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனம் சார்ந்தோ அல்லது தனி நபராகவோ விண்ணப்பிக்கலாம். அவர்கள் சார்ந்துள்ள துறையை பொறுத்து அவர்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்படும். அவர்கள் வசிக்கும் மண்டலங்களை பொறுத்து மண்டல அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி அவர்கள் செயல்பட வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE