பார்த்தசாரதி கோயிலின் ரூ.6 கோடி சொத்து மீட்பு

By KU BUREAU

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி சொத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் 3,424 சதுர அடி பரப்பளவில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான வணிகக் கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தவர்கள், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனர்.

இது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற நிலையில், அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோயில்துணை ஆணையர் சி.நித்யா,உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, கோயில் வசம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.6 கோடி என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE