விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகே உள்ள வி.புத்தூர் கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்ட றிந்தனர்.
அப்போது வி.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் பூர்ணிமாவின் கணவரும், திமுகவைச் சேர்ந்தவருமான சிவராஜ் என்பவர், “எங்கள் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டு, அமைச்சர் பொன்முடியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பொன்முடி, “இதுநாள் வரை இந்த குடிநீர் பிரச்சினையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தீர்களா? அப்படிச் செய்யாமல் தொடர்ந்து அதையே பேச வேண்டாம்” என்று கூறினார். அதன்பின்கேள்வி எழுப்பியவர் அமைதியா னார். திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரே நேரடியாக அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை குறித்து, இப்படிய சரமாரியாக கேள்வி எழுப்பியதால், கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.