500 மதுக் கடைகளை மூடுவதாக கூறி 1,000 மனமகிழ் மன்றங்களை திறக்கிறார்கள்: ஹெச்.ராஜா விமர்சனம்

By KU BUREAU

புதுக்கோட்டை: பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜாபுதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மதுப் பிரியர்கள் இணைந்து நடத்தும் அரசியல் மோசடி மாநாடுதான் விசிக சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாடு.

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவதாக கூறிக்கொண்டு, 1,000 மனமகிழ் மன்றங்களை திறக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசு. பழநி முருகன் கோயில் கோபுரத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது, கோயில் கட்டுமானப் பணி தரமற்று நடந்திருப்பதை உறுதி செய்கிறது. எனவே, இதுவரை கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள கோயில்களின் கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனங்களில் மோசடி நடந்துள்ளது. அதிமுகவின் வாக்குகள் 15 சதவீதம் குறைந்திருப்பதற்கு, எம்ஜிஆர், ஜெயலலிதாவைப்போல தற்போதைய அதிமுக தலைமை இல்லை என்பதை தொண்டர்கள் உணர்ந்ததுதான் காரணம். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE