உயர் நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அஹமது பதவியேற்பு: அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்றியவர்

By KU BUREAU

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஷமீம் அஹமது நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்தஷமீம் அஹமதுவை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம்செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் நீதிபதி ஷமீம் அஹமதுவுக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற சக நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வரவேற்றுப் பேசினர். பின்னர் நீதிபதி ஷமீம் அஹமது ஏற்புரையாற்றினார்.

தொடர்ந்து, நீதிபதி ஷமீம் அஹமது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிபதி ஷமீம் அஹமது, அலகாபாத்தில் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்து 1993-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய அவர் 2019-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE