திண்டுக்கல்லில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காது கேளாதோர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத் சிங், மாவட்ட தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் செய்கை மொழியை ஒரு பாடமாக அறிவித்திட வேண்டும். பேருந்துகளில் நிறுத்தம் குறித்து அறிந்து கொள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE