டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அறிவிப்பு!

By வீரமணி சுந்தரசோழன்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக 4 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும், அதேபோல வாக்கு எண்ணிகை நடைபெறும் ஜூலை 13-ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட விழுப்புரம் ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 10.07.2024 அன்று நடைபெறுவதையொட்டி 08.07.2024 மற்றும் 10.07.2024 ஆகிய 3 தினங்கள் மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் [அனைத்து FL2 to FL11 (FL6 தவிர)] மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் மது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE