பாரிஸ் ஒலிம்பிக் - தடகளத்தில் பங்கேற்கும் 28 இந்திய வீரர்கள் அறிவிப்பு; 5 தமிழக வீரர்களுக்கு இடம்!

By வீரமணி சுந்தரசோழன்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுள்ளனர்.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன், பிரவின் சித்திரவேல், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர். நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது பங்கேற்கவுள்ள 28 பேரில் 17 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள் ஆவர். ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.

தடகள அணி விவரம் - ஆண்கள்: அவினாஷ் சேபிள் (3,000 மீ ஸ்டீபிள் சேஸ்), நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் டூர் (ஷாட் எறிதல்), பிரவீன் சித்ரவேல், அபுல்லா அபூபக்கர் (மும்முறை தாண்டுதல்), அக்ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கிமீ பந்தய நடைபயிற்சி) ), முஹம்மது அனஸ், முஹம்மது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4x400 மீ ரிலே), மிஜோ சாக்கோ குரியன் (4x400 மீ ரிலே), சூரஜ் பன்வார் (பந்தய நடை கலப்பு மாரத்தான்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).

நீரஜ் சோப்ரா

பெண்கள்: கிரண் பஹல் (400 மீ), பருல் சௌத்ரி (3,000 மீ. ஸ்டீபிள் சேஸ் மற்றும் 5,000 மீ), ஜோதி யர்ராஜி (100 மீ தடை ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அபா கதுவா (ஷாட் எறிதல்), ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா எம்ஆர் (4x400 மீ தொடர் ஓட்டம்), பிராச்சி (4x400 மீ), பிரியங்கா கோஸ்வாமி (20 கிமீ பந்தய நடை/பந்தய நடை கலப்பு மராத்தான்).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE