புழல் சிறையில் இருந்தபடியே இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; ஸ்கெட்ச் போட்ட கைதி - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

By வீரமணி சுந்தரசோழன்

சென்னை புழல் சிறையில் இருந்தபடியே கைதி ஒருவர் தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளது அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை புழல் சிறையில் இருந்தபடியே காசிலிங்கம் என்ற கைதி, தன் மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு, சென்னையில் இருந்து இலங்கைக்கு 1.47 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

புழல் மத்திய சிறைச்சாலை

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கும் நிலையில், சிறையிலிருந்து ஒரு கைதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் புதிய உச்சம்.

ஏற்கனவே திமுக அயலக அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் மாபியா நடத்திவந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு போதைப்பொருள் மாபியா அம்பலப்பட்டிருப்பது, இந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாக மாறியிருப்பதையே காட்டுகிறது. போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம்.

தமிழ்நாட்டில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளை முற்றுமாக ஒழிக்க வேண்டும். இல்லையேல், போதைப்பொருள் புழக்கத்திற்கு பொறுப்பேற்று திமுக முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!' என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE