சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

By வீரமணி சுந்தரசோழன்

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் வி.கே.சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நர்மதா பச்சாவோ அந்தோலன் (என்பிஏ) அமைப்பின் தலைவராகவும், பழங்குயினருக்கான வாழ்வாதார போராட்டங்களுக்காகவும் தேசிய மேதா பட்கர் நன்கறியப்பட்டவர். இவருக்கு எதிராக தற்போது டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

தேசிய குடிமையியல் விடுதலைகள் சங்கத்தின் அப்போதைய தலைவராக பதவி வகித்த வி.கே. சக்சேனா, தனது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் நவம்பர் 5, 2000இல், பத்திரிகை ஒன்றில் "தேசபக்தரின் உண்மை முகம்" என்ற பெயரில் தவறான உள்ளீடுகளை இணைத்து, மேதா பட்கர் கட்டுரை ஒன்றை வெளியிட்டதாக அவதூறு வழக்கை தொடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், சக்சேனா பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பட்கர் செயல்பட்டிருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாட்கர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, ஆகஸ்ட் 1 வரை அவரது தண்டனை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேதா பட்கர் - சக்சேனா

மேதா பட்கர் - வி.கே.சக்சேனா இடையே 2000-ம் ஆண்டு முதல் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. சக்சேனாவுக்கு எதிராக மேதா பட்கரும் வழக்குகளை தொடர்ந்துள்ளார். வி.கே.சக்சேனா அப்போது அகமதாபாத்தைச் சேர்ந்த நேஷனல் கவுன்சில் ஃபார் சிவில் லிபர்டீஸ் என்ற என்.ஜி.ஓ அமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE