தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

By கே.காமராஜ்

தமிழ்நாட்டில் மருத்துவம், வனம், சுற்றுலா, நீர் வளம் உள்ளிட்ட 18 துறைகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த சுப்ரியா சாகூ மருத்துவத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், உயர்கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.’

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

‘சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.’

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

‘நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா காகிதத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனராக இருந்த ஹரிஹரன், நில சீர்திருத்த துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE