இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!

By கவிதா குமார்

இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார். அவருக்கு வயது 91.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தன்

இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு நாடாளுமன்றத்தில் 3 மாத கால விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE