டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.20.42 கோடி பரிசு: மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

By வீரமணி சுந்தரசோழன்

டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 20.42 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணிக்கு 10. 67 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்ற 20 அணிகளுக்கும் சேர்ந்து 93.80 கோடி பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்ற 20 அணிகளுக்கும் சேர்ந்து 93.80 கோடி பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் கலந்துகொண்ட எல்லா அணிகளுக்குமே பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 13 லிருந்து 20 இடங்கள் வரை பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தலா 1.87 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது. 9 முதல் 12 இடங்களுக்குள் வந்த அணிகளுக்கு 2.06 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை

மேலும் சூப்பர் 8 சுற்றுக்கு வந்து வெளியேறிய நான்கு அணிகளில் ஒவ்வொரு அணிக்கும் 3.18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளுக்கும் தல 6.56 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தோடு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு 20.42 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணிக்கு 10. 67 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு இந்த தொடர் முழுவதும் வெற்றி பெற்ற ஒவ்வொரு போட்டிக்கும் அந்த அணிக்கு தலா 26 லட்ச ரூபாய் கொடுக்கப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை

இறுதிப் போட்டியில் சிறந்த கேட்ச் பிடித்த சூரிய குமாருக்கு இந்திய மதிப்பில் 2.5 லட்சம் ரூபாயும், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலிக்கு 4 லட்ச ரூபாயும், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற பும்ராவுக்கு இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய்க்கு மேலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE