'கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம்... முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு!

By ச.ஆனந்த பிரியா

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான முக்கிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இருப்பதாக பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது.

‘கல்கி 2898 ஏடி’

இந்தப் படம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டதாகவும் இரண்டாம் பாகத்திற்கு ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதை உறுதி செய்துள்ள படக்குழு இதுகுறித்தான அப்டேட்டும் கொடுத்துள்ளது. அதாவது, “’கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. முக்கியமான காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளது.

‘கல்கி 2898 ஏடி’

இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பு முடித்த பின்னரே அந்த அப்டேட் கொடுப்போம்” எனக் கூறியுள்ளார். இந்த செய்தி பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE