டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை பைனல்... விராட் கோலியை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்!

By கவிதா குமார்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில் அது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன, இதில் வெற்றி பெறும் அணி உலக சாம்பியனாகும். இந்தப் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில், இப்போட்டி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைளதங்களில் கலக்கி வருகின்றன.

அதில், இறுதிப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 300 ரன்கள் எடுக்க வேண்டும். மேலும், தென்னாப்பிரிக்க அணி பூஜ்ஜியத்திற்குள் அவுட் ஆக வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய ஸ்கோர் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் இறுதிப் போட்டி வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரின் பிரார்த்தனையும் தொடங்கும் என முழக்கமிடும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வெல்வோம் என்று இந்தியர்கள் நம்பிக்கையுடன் இருந்தாலும் உள்ளத்தில் பதற்றம், இதயம் படபடக்கும் என்ற பதிவும் வைரலாகி வருகிறது.

இம்முறை தோற்காத தலைவராக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளீர்கள். இறுதிப்போட்டியில் எங்கள் திறமையை வெளிப்படுத்துவோம் என்று நாய் கூறிய மீம்ஸ் ஒன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மோசமான பார்மில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். இந்த மீம்ஸ்களில், கோலி எந்த கோயிலுக்கு ஆன்லைனில் செல்லலாம் என்பது குறித்த தகவல்களை அவர் தொலைபேசியில் பேசும் படத்தைப் போட்டு கேலி செய்துள்ளனர்.

இந்திய அணி கோப்பயை வெல்ல வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப் போட்டிக்கு முன்பு, பாகுபலியின் கிளிப்புகள் மீம்ஸாக மாறியுள்ளன.

இங்கு இந்திய அணியில் பிரபாஸ், தென்னாப்பிரிக்க அணியில் ராணா டகுபதி. இந்த வீடியோவும் கிரிக்கெட் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இறுதிப் போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்று எய்டன் மார்க்ரம் கேப்டனாக இருக்கும் மீம் ஒன்றும் வைரலாகி வருகிறது. ஏனெனில் மார்க்ராம் தலைமையில் நடந்த அனைத்து இறுதிப் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE