இன்று காலை பிரபல திரைப்பட நடிகை மீரா நந்தனுக்குத் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
’வால்மீகி’, ‘அய்யனார்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட மீரா நந்தன் மலையாளத்திலும் படங்கள் நடித்து வந்தார். சினிமாவுக்கு சில வருடங்கள் பிரேக் கொடுத்தவர் துபாயில் பண்பலை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை அவருக்கு குருவாயூர் கோயிலில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது. பியூ ஸ்ரீஜூ என்பவரைத் திருமணம் முடித்துள்ளார். ’என் வாழ்க்கையின் காதல்’ என்று கேப்ஷன் கொடுத்து இந்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சங்கீத், ரிசப்ஷன் எனக் களைக்கட்டிய இந்தத் திருமணக் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.