அதி வேகம் ஆபத்தில் முடிந்தது... கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் பலி: வெளியான அதிர்ச்சி வீடியோ!

By கவிதா குமார்

மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இரவு 11 மணியளவில் எரிபொருளை நிரப்பிவிட்டு தவறான பக்கத்திலிருந்து நெடுஞ்சாலையில் நுழைந்த கார் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதியதால், ஒரு கார் அந்தரத்தில் பறந்து நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பில் விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் காரில் இருந்து சாலையில் விழுந்தனர். இதில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த சம்ரித்தி நெடுஞ்சாலை போலீஸார் மற்றும் ஜல்னா போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தில் கார்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது, கிரேன் மூலம் அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் காயமடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE