நீலகிரியில் வெளுத்து வாங்கும் கனமழை... 3வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

By கே.காமராஜ்

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு 3வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் தொடரும் கனமழை

கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மழை இன்னும் தொடர்ந்து வருவதால் இன்றும் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை (கோப்பு படம்)

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE