‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக் வெளியானது - அஜித் ரசிகர்கள் ஆரவாரம்!

By வீரமணி சுந்தரசோழன்

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இப்போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தை அடுத்து நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என தெரிகிறது.

கடந்த மாதம் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு துவங்கியது. படத்தில் இருந்து அஜித்தின் ஸ்மார்ட் லுக்கும், ஹைதராபாத்தில் அவர் பைக் ஓட்டிய வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. முதல் ஷெட்யூலில் படமாக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கலோயன் கோரியோகிராஃபி செய்திருக்கிறார். தற்போது இப்படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் இப்போது படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் செகண்ட் லுக்கில் அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது போலவே தெரிகிறது. அஜித்தை சுற்றியிலும் துப்பாக்கிகள் அணிவகுத்து கிடக்கின்றன. பின்னணியில் ‘காட் ப்ளஸ் யு மாமே’ என எழுதப்பட்டுள்ளது. நாக்கை துருத்திக்கொண்டு, கையில் பாம்பு நெளியும் டாட்டுவுடன் நிற்கும் அஜித்தின் கலர்ஃபுல் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. போஸ்டர்களின்படி இது ஜாலியான படமாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE