’இந்தியன்’ படத்தின் மூன்று பாகங்கள்...இயக்குநர் ஷங்கர் சொன்ன விளக்கம்!

By ச.ஆனந்த பிரியா

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது.

அங்கு செய்தியாளர்களை படக்குழு சந்தித்து பேசியபோது, ‘இந்தியன்’ படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கியது ஏன் என இயக்குநர் ஷங்கரிடம் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பேசுகையில், “நான் முன்பே சொன்னதுபோல, ‘இந்தியன்’ கதை நம் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும்.

ஆனால், ‘இந்தியன்2’ கதை நம் நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் பல நாடுகளிலும் நடக்கும்படி அமைத்திருக்கிறேன். முதலில் இரண்டாம் பாகம் மட்டும் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் எடுத்தோம். எடிட்டர் டேபிளில் அமர்ந்தபோது, எல்லா காட்சிகளும் என்னுடைய பார்வையில் நன்றாக வந்திருந்தது.

’இந்தியன்’

இரண்டாம் பாகம் மட்டும் போதும் என்று நினைத்து காட்சிகளை கட் செய்தால் கதையின் ஆன்மா போய்விடும். அதுவும் இல்லாமல், எந்தக் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தக் கதையில் இரண்டு பாகங்கள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. அதனால், ’இந்தியன்2’ மற்றும் ‘இந்தியன்3’ என இரண்டு பாகங்களை உருவாக்கினோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE