டெல்லியில் அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வீடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

By வ.வைரப்பெருமாள்

டெல்லியில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டு கட்டிடத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த டெல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வாகனம்

தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து பலத்த தீக்காயங்களுடன் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் 4 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் ஹீரா சிங் (48), நீது சிங் (46), ராபின் (22), லக்ஷ்யா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணையில், வீட்டில் இருந்த இன்வெர்ட்டரில் இருந்து தீப்பிடித்து சோபாவில் தீப்பற்றியது.

உயிரிழப்பு

பின்னர் வீட்டின் பிற பகுதிகளுக்கும் தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE