நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்து என செய்தி பரவி வந்த நிலையில் அவரது மனைவி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சினிமா உலகில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பிரபலங்களின் விவாகரத்து தொடர்பான செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமந்தா- நாகசைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்- சைந்தவி எனத் தொடர்ந்து பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். இந்தப் பட்டியலில், ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் இணைந்துள்ளனர் எனறு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2009ல் தனது தோழியான ஆர்த்தியை காதலித்து கரம் பிடித்தார் ஜெயம் ரவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்படியான சூழ்நிலையில்தான் இந்த விவாகரத்து செய்தி வந்துள்ளது. ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆர்த்தி ரவி.
ஜெயம் ரவி நடிகராக அறிமுகமான ‘ஜெயம்’ படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரியான, ‘காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை...’ குறிப்பிடும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஆர்த்தி ரவி.