ராகவா லாரன்ஸுடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ்.ஜே.சூர்யா!

By காமதேனு

’சேவையே கடவுள்’ என்ற பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கியுள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

நடிகர் ராகவா லாரன்ஸ் ‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ‘மாற்றம்’ என்ற பெயரில் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா- ராகவா லாரன்ஸ்

இதன் முதல் கட்டமாக ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில் தலா 10 டிராக்டர்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா- ராகவா லாரன்ஸ்

இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் எஸ். ஜே.சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பக்கம், மேல்தெருவில் வசிக்கும் விவசாயி பத்ரி என்பவருக்கு அவரது சொந்த செலவில் டிராக்டர் வழங்கி மாற்றத்திற்கான தனது சேவையை துவங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE