ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த எம்பி கனிமொழி; கையெடுத்து கும்பிட்ட நபரால் நெகிழ்ச்சி!

By சந்திரசேகர்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கனிமொழி, மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது வந்த ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்கு ஆம்புலன்ஸில் இருந்த நபர், கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் எம்பி கனிமொழி மீண்டும் போட்டியிட்டு, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதையடுத்து, வாக்களித்து வெற்றிப் பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று எம்பி கனிமொழி நன்றி தெரிவித்தார். கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம் பட்டியில் தொடங்கி திட்டங்குளம், விஜயாபுரி கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், கோவில்பட்டி நகரப் பகுதிகள், இனாம் மணியாச்சி மற்றும் நாலாட்டின்புதூரில் வாக்களித்த வாக்காளர்களுக்கு எம்பி கனிமொழி நன்றி தெரிவித்தார்.

கனிமொழி மீது பூக்களை தூவிய பொதுமக்கள்

அப்போது பேசிய கனிமொழி, "மகளிர் உரிமை தொகை விடுபட்ட மகளிருக்கு பரிசீலனை ‌ செய்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விரைவில் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும். வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும், வேலை நாட்கள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் ஒன்றியத்தில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி வந்துவிட்டது. ஆகையால் வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலை செய்ததற்கான நிதியை மத்திய அரசு குறைத்து வருவதால், சரியாக வேலையும் கொடுக்க முடியவில்லை. ஊதியமும் கொடுக்க முடியவில்லை. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" என்றார்.

கையெடுத்து கும்பிட்ட ஆம்புலன்ஸிஸ் இருந்த நபர்

நாலாட்டின்புதூரில் கனிமொழி பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் பேச்சினை நிறுத்திய கனிமொழி ஆம்புலன்ஸ்க்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக கூட்டத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ்சில் இருந்தவர் கையொடுத்து கனிமொழியை பார்த்து கும்பிட்டுவாறு சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE