கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை சோமண்ணா எடுக்க கூடாது... டிடிவி தினகரன் வலியுறுத்தல்

By சந்திரசேகர்

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தையின் மூலம் மேகதாது அணைத் திட்டம் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சோமண்ணா கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேகதாது அணை குறித்த அமைச்சர் சோமண்ணாவின் பேச்சு தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற சோமண்ணா

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணா மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமிக்கும் போதே, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை நியாயமாக்கும் வகையில் அவரது செயல்பாடுகளும் ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பது சோமண்ணா வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு சோமண்ணா செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE