கேரளாவில் குடும்ப பிரச்சினை காரணமாக மருமகனை மாமனார், மாமியார் சேர்ந்து, கும்பலாக உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சோலக்கரை பகுதியில் வசித்து வருபவர் மொய்தீன் ஷபியா தம்பதியினரின் மகள் ரக்பீனா. இவருக்கும், சுலைமான் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கால கட்டத்திலேயே இருந்து சுலைமானுக்கும், ரக்பியாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதும், இந்த சண்டையின் போது ரக்பீனா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கு செல்வதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல கணவன் மனைவிக்கும் சண்டை நடந்த நிலையில் ரக்பீனா கோபித்துக் கொண்டு தனது 6 வயது குழந்தையுடன் தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் சுலைமான் தனது குழந்தைக்கு புதிய உடைகள் மற்றும் பலகாரம் ஆகியவற்றை வாங்கி கொண்டு ரக்பீனவை பார்க்க சென்றுள்ளார். அவரை மொய்தீன் ஷபியா தம்பதியினரின் மற்றும் ரக்பீனா ஆகியோர் இணைந்து உருட்டு கட்டையினால் சராமரியாக தாக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் இறந்து விடுவார் என எண்ணிய அந்தப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக சுலைமானை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் சுலைமானின் கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சோலக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மருமகனை மாமியார், மாமனார், மனைவி என கூட்டு சேர்ந்து தாக்கும் வீடியோ, தற்போது கேரளாவில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!
நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!
சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!